செவ்வாய், 7 டிசம்பர், 2010

அண்ணன் மு க அழகிரி



மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல் அமைச்சர் திரு மு.கருணாநிதி - தயாளுஅம்மாளின் மூத்த மகன் ஆவார். சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார்.
இவருடைய சகோதரர்கள் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார்.

அழகிரியின் மனைவி பெயர் காந்தி இவர் தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். (காதல் திருமணமா என்று கேட்க கூடாது. ஏனென்றால் எனக்கு அது தெரியாது) இவர்களுக்கு கவிதாயினி என்கிற கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. துரை என்கிற தயாநிதி எனும் மகன் இருக்கிறார். துரைக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையை கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார் (வரும்போது உருட்டுகட்டையும் கொண்டு வந்து இருப்பாரோ? ). அது முதல் மதுரையிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை சத்தியசாய் நகரில் அவரது வீடு உள்ளது.

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா.கிருட்டிணன், 2003 மே மாதம் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, சிவா, கார்த்தி, ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி, சீனு, ராஜா, முபாரக், இப்ராஹிம் சுல்தான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய சாட்சிகளான தா.கிருட்டிணனின் தம்பி ராமையா, அவரது மனைவி பத்மாவதி, கார் டிரைவர் மதியரசன், கிருட்டிணனின் தம்பி மகன் நெடுஞ்செழியன், வீரபாண்டி, ஆதிகேசவன், துரைராஜ் ஆகியோர் "கொலை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கொலையாளிகளையும் தெரியாது. போலீசார் எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டோம்' என்று, சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் 8-3-2008ம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது. எப்படியோ தப்பிச்சிடுறாரு..

தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொறுப்பு ஏற்று பணியாற்றி வருகிறார்.
இதுதான் அண்ணன்  அழகிரியின் சின்ன பயோடேட்டா???
நன்றி :ரவிக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக