செவ்வாய், 7 டிசம்பர், 2010

2050ல் தமிழ் பாட நூல்,

2050-ல் தமிழ்மொழி பாடநூல்

கடவுள் வாழ்த்து
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி போற்றி
மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
கணிதம்.
அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.
புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.
வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான தங்கையும் தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....
 நன்றி: புலிகேசி
இந்தியாக்கும் இந்த நிலைமை வந்திடக்கூடாது !!!!!!
 
  தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து 'பெயில் அவுட்'.

வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கபடுகிறது என்ற செய்தி.

ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு தான்.

இதன் பயனை அனுபவிக்க போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்பட போகும் இழப்புகள் விழ போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. இது ஐரோப்பிய வங்கிகளை காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.

ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும்போது மிக பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடுபடும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நலப் பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இது போல் பற்றாக்குறை ஏற்படும்.

பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனை திருப்பி தர முடியுமா?. ரிஸ்க் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும்போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதிப் பிரச்ச்னை ஏற்பட்டு அதிலிருந்து மீள பொருளாதார உதவியை (பெயில்-அவுட்) நாடுகள் கோரும்.

ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் அதன் மொத்த உற்பத்தியில் (GDP) 12 சதவீதமாகத் தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை (ஜெர்மனி- 40%, பிரான்ஸ்- 60% ) விட மிகக் குறைவு.

அப்படியென்றால் அரசு மிகவும் பொறுப்பாக இருந்துள்ளது என்று தான் அர்த்தம்.

ஆனால், அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதி துறையில் இருந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் வந்தது. அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாளும், Sub Prime கடன்களாளும் மிகப் பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்டத் தொடங்கிய போது,

ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன. ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதித் துறையில் கட்டுபாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்டபடி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை.

இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவின் பிற நாடுகளில் வேட்டையை தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டிருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் கொடுத்தும்,

அங்கு வங்கித்துறை கட்டுபாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளி கொடுத்தும் தங்கள 'பேலென்ஸ் ஷீட்டை' பெருக்கி காட்டினர்.

அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம். வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மீடியாக்கள் மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடங்கிவிட்டதாகவும், இந்த வளர்ச்சி தொடரும் என்றும், நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காணப் போவதாகவும் செய்திகளை பரப்பின.

அயர்லாந்தில் நிதித் துறையில் கட்டுபாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லா கடன் வழங்கப்பட்டது. இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது.

இந்தக் கடனின் அளவு எவ்வளவு அதிகம் என்பதை இந்த கிராபிக்ஸை பார்த்தால் புரியும். அதில் ஐரோப்பிய நாடுகளின் அரசின் பட்ஜெட் பற்றாகுறையும், அந்த நாடுகளின் தனியார் வங்கிகள் அயர்லாந்துக்கு அளித்த கடனும் ஒப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாகுறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்கு கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!.

வழக்கம்போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வரத் தொடங்கிய போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததைப் போல அயர்லாந்திலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது.

சந்தை பொருளாதாரக் கூற்றுப்படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும்.

ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்று கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாரக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியம் (IMF) மூலம் கடும் நெருக்கடி தரப்பட்டது.

அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க, பல வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்கத் தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என்று கூறி நிலைமையை சமாளித்திருப்பார்கள்.

அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டலாவது நாணய மதிப்பை குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியை பின் பற்றி இருக்கலாம். பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. அதன் கடனை திருப்பி செலுத்துமா என்ற நம்பகத்தன்மையும் குறைய ஆரம்பித்தது.

அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச ஆரம்பித்துவிட்டனர். உலகச் சந்தையிலும் அயர்லாந்து கடன் பெற 8 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட்டது.

தனது அதிகமான கடனை 8% மேல் வட்டி கொடுத்து வாங்கினால், அந்நாடு மீண்டும் மீள முடியாத கடன் வலையில் வீழ வாய்ப்புள்ளது.

அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. சர்வதேச நிதியத்திடம் சென்றால் தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்க சொல்லி விட்டது.

இந்த பிரச்ச்னைக்கு முன், நியாயமான பட்ஜெட் போட்டு, அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை, மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்க சொல்லி, நெருக்கடி கொடுத்து வெற்றியும் பெற்று விட்டனர்.

அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்து கொள்வீர்கள்.

1.குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்கபட்டுள்ளது.

2. ஏற்கனவே வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.

3. மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3 பில்லியனுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.

4. வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

5. பொதுத் துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பள குறைப்பில் ஈடுபட்டுள்ளன.

இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் சர்வதேச நிதியத்திடமிருந்து கொஞ்சம் கடன் கிடைக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தக் கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிடப் போவது இல்லை. இந்தக கடன் ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்த தான் உதவும்.

அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்கு அயர்லாந்து தரவுள்ளது.

இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்ப்பின் மூலம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

சரியாகச் சொன்னால், இது கிட்டத்தட்ட நம் ஊர் கந்துவட்டிக் கதை தான்.

இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு 'பெயில் அவுட்' பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!.

உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு தான் மிக பெரிய லாபம். அயர்லாந்து நாடு வெளி சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வெண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும் (Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்).

எனவே இங்கிலாந்து அரசு 3.3% க்கு கடன் வாங்கி 5%க்கு அயர்லாந்துக்கு கொடுக்க போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கே லாபம்.






 நன்றி :மது


உலகின் மிக மோசமான சாலைகள்,வளைவுகள்.






 

World's Most Dangerous Road

  நன்றி: மது












அண்ணன் மு க அழகிரி



மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல் அமைச்சர் திரு மு.கருணாநிதி - தயாளுஅம்மாளின் மூத்த மகன் ஆவார். சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார்.
இவருடைய சகோதரர்கள் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார்.

அழகிரியின் மனைவி பெயர் காந்தி இவர் தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். (காதல் திருமணமா என்று கேட்க கூடாது. ஏனென்றால் எனக்கு அது தெரியாது) இவர்களுக்கு கவிதாயினி என்கிற கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. துரை என்கிற தயாநிதி எனும் மகன் இருக்கிறார். துரைக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையை கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார் (வரும்போது உருட்டுகட்டையும் கொண்டு வந்து இருப்பாரோ? ). அது முதல் மதுரையிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை சத்தியசாய் நகரில் அவரது வீடு உள்ளது.

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா.கிருட்டிணன், 2003 மே மாதம் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, சிவா, கார்த்தி, ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி, சீனு, ராஜா, முபாரக், இப்ராஹிம் சுல்தான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய சாட்சிகளான தா.கிருட்டிணனின் தம்பி ராமையா, அவரது மனைவி பத்மாவதி, கார் டிரைவர் மதியரசன், கிருட்டிணனின் தம்பி மகன் நெடுஞ்செழியன், வீரபாண்டி, ஆதிகேசவன், துரைராஜ் ஆகியோர் "கொலை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கொலையாளிகளையும் தெரியாது. போலீசார் எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டோம்' என்று, சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் 8-3-2008ம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது. எப்படியோ தப்பிச்சிடுறாரு..

தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொறுப்பு ஏற்று பணியாற்றி வருகிறார்.
இதுதான் அண்ணன்  அழகிரியின் சின்ன பயோடேட்டா???
நன்றி :ரவிக்குமார்

நம்ம கலைஞரின் சொத்து இவ்வளவுதான்

கருணா நிதியின் குடும்ப சொத்து இவ்வளவுதானா!!!!!!!!!!!!!!!!!?????????
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.


*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.



பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.



இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.



பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.



இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?



1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra



இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


அது மட்டுமல்லாமல் ஆ.ராசாவின் சொத்து மதிப்பு சேர்க்க வில்லை. உங்களுக்கே தெரியுமே. அதான் அந்த ௨ ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்தவருமானமே இவ்வளவு என்றால் மீதி மற்றவை.?


வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

 நன்றி: ரவிக்குமார்

தி மு க வும் ஸ்பெக்ட்ராமும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஆ.ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை விசாரிக்கும் முன்பே அவர் மீது
குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுவதற்கு வாய்ப்பே
இல்லை.   ராசா தலித் என்பதால் இவ்வாறு பார்ப்பன ஊடகங்களாலும், பார்ப்பனீய
சக்திகளாலும் வஞ்சிக்கப் படுகிறார், இதெல்லாம் இணையத் தளங்களிலும்,
ஊடகங்களிலும், ராசாவின் ஆதரவாளர்களால் கூறப்படும் செய்திகள். ஒருவர்,
பார்ப்பனர்கள்
 இவ்வளவு நாள் ஊழல் செய்தார்கள், கொஞ்ச நாள் தலித் ஒருவர் அடிக்கட்டுமே,
அதனால் என்ன தவறு ? என்று கருத்து கூறியிருக்கிறார்.


யப்பா சாமி... உன் திசைக்கே ஒரு கும்புடு.  டெல்லி பக்கம்
வந்துடாதேப்பா..  உன்னோட சேத்து என்னையும் குழில்ல தள்ளிடுவே....
ஊழலை நியாயப் படுத்தத் தொடங்கினால் ஒவ்வொருவரும் ஒரு நியாயத்தை
சொல்லுவார்கள். அது நமது நேர்மையையே சந்தேகிக்கும் ஒரு சூழலுக்கு இட்டுச்
செல்லும். நாம் அந்தத் தவறை செய்யக் கூடாது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே…
அது பார்ப்பனரா, பனியாவா என்ற பாரபட்சம் கூடாது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்த குற்றச் சாட்டுகள் என்ன ? ஒவ்வொன்றாகப்
பார்ப்போம்.

1)  2008ம் ஆண்டில் 2001ம் ஆண்டில் இருந்த விலைகளுக்கு பத்து மடங்கு விலை
உயர்ந்து விட்டது என்பதை பொருட்படுத்தாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்தது.

2)  தொலைத் தொடர்பு பிசினசில் இல்லாத கட்டுமானக் கம்பெனிகளுக்கு லைசென்ஸ்
வழங்கியது.

3)  ஏலத்தில் லைசென்ஸ் வழங்காமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று
முறையை கடைபிடித்தது.

4)  விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை திடீரென்று மாற்றி, பெரும்பாலான
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை தவிர்த்தது

5)  விண்ணப்பிக்க கடைசி நாளை திடீரென்று மாற்றியதன் மூலம் 575
விண்ணப்பங்களில் 122 பேருக்கு மட்டும் மொத்த அலைக்கற்றையையும் வழங்கியது.

6)  ட்ராய் பரிந்துரைகளை மீறியது

7)  தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை
ஒதுக்கீடு செய்யாமல், அத்துறையில் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு
செய்ததன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு
அலைக்கற்றையை மறு விற்பனை செய்ய வழி கோலியது.

8)  சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அதிகாரக் குழுவின்
பரிந்துரைகளை மீறியது.

9)  ரோல் அவுட் ஆப்ளிகேஷன் எனப்படும், ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட
காலத்துக்குள் பணியை தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை லைசென்ஸ் பெற்ற
நிறுவனங்கள் மீற அனுமதித்தது.

இதுதான் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இருக்கக் கூடிய முக்கிய குற்றச்
சாட்டுகள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது
என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது.
தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த
பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.


1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி,
537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன.

திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம்
25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது.

இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்
உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும்.   25.09.2007 வரை
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான்,
விண்ணப்பங்கள் அதிகம்.

மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழங்கப்
பட்டிருக்கின்றன. இந்த 122 நிறுவனங்களுக்கும் இருந்த மொத்த ஸ்பெக்ட்ரமும்
ஒதுக்கீடு செய்து முடித்தாகி விட்டது. இனி ஒதுக்கீடு செய்ய ஸ்பெக்ட்ரமே
இல்லை என்பதால் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்காத மற்ற நிறுவனங்கள்,
ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனனங்களுக்கு விற்ற விபரங்களை
வெளியிடத்
 தொடங்குகின்றன.

ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற
நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல்
ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும்,
மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த
வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று
அழைக்கிறார்கள்.

ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில்
ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட
நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம்
ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம்
அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை
அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக
இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு
கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து
விடக் கூடாது
 என்பதற்காகத் தான்.

ஆனால் ராசாவின் அமைச்சகம், தனது 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை
செய்தியில், “எல்லா வேலைகளும் முடிக்கும் வரை (Roll out obligation) ஒரு
நிறுவனம் மற்றொரு நிறுவனத்தோடு இணையக் கூடாது. ஆனால் இதற்கான கோரிக்கை
பரிசீலிக்கப் படலாம்“ எப்படி இருக்கிறது ?   இந்த விதிவிலக்கை
பயன்படுத்தித் தான் 1537.01 கோடிக்கு 16 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்ற
ஸ்வான் நிறுவனம் தனது 45 சதவிகித பங்குகளை மட்டும் 9400
 கோடிக்கு விற்க முடிந்தது. அதே போல 1658.57 கோடிக்கு 22 வட்டங்களுக்கு
லைசென்ஸ் பெற்றிருந்த யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவிகித பங்குகளை
11,600 கோடிக்கு விற்க முடிந்தது.   இவ்வாறு பங்குகளை விற்ற இந்த இரண்டு
நிறுவனங்களும், ஒரு டவரை கூட நிறுவவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
அதாவது தொழில் தொடங்கும் முன்பாகவே லாபம்.

அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது. ராசா அமைச்சகத்தின்
அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு
கடிதத்தை எழுதுகிறார்.   அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும்
கூறுகிறார்.

ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார்.   அக்கடிதத்தில்,
இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும்,
மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும்
அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம்
உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும்.

இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு
தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள்.
ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி
தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு,
வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார்.
மற்றொருவர் தொலைத்
 தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இவர் ஆ.ராசாவின் நெருக்கடி
பொறுக்க முடியாமல் விருப்ப ஓய்வில் செல்லுகிறார்.

இதற்கு நடுவே, கடைசித் தேதியை 1.10.2007ல் இருந்து 25.09.2007க்கு மாற்ற
சட்ட அமைச்சகத்தின் சம்மதத்தை பெற, ராசா சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம்
எழுதுகிறார். சட்ட அமைச்சர், இதை அமைச்சரவை அதிகாரக் குழுவிற்கு அனுப்பிய
பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பதிலாக ராசா என்ன
செய்கிறார் தெரியுமா ? 1.11.2007ல் பிரதமருக்கு, சட்ட அமைச்சர் சம்பந்தா
சம்பந்தம் இல்லாமல் கடிதம்
 எழுதுவதாக தெரிவிக்கிறார்.

தாமதமாக விழித்துக் கொண்ட ட்ராயும் தன் பங்குக்கு, ராசாவை தடுக்க முயற்சி
செய்கிறது. ட்ராய் வழிகாட்டுதல்களில் சந்தேகம் இருந்தால், மீண்டும்
ட்ராயை அணுக வேண்டும் என்ற சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டி, 15.10.2007
அன்று, ட்ராய் ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தில்
சட்டத்தில் உள்ளவாறு மறு வழிகாட்டுதலுக்கு ஒரு கடிதம் எழுதும் படியும்,
அவ்வாறு
 எழுதவில்லையென்றாலோ, உதாசீனப்படுத்தினாலோ, கடும் விளைவுகளை சந்திக்க
நேரிடும் என்று குறிப்பிட்டது. 19.10.2007 அன்று ஆ.ராசா வெளியிட்ட
பத்திரிக்கை செய்தி வந்த பிறகு, உடனடியாக மறு ஆலோசனைக்கு கடிதம்
எழுதுமாறு வற்புறுத்தியுள்ளது. அப்போதும் ராசா அசையவில்லை.

14.01.2008 அன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறது. இந்தக் கடிதத்தையும்
ராசா நிராகரித்தார்.

இதன் நடுவே, இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் அப்போதைய
நிதித் துறைச் செயலர் சுப்பாராவ், 22.11.2007 அன்று, வெறும் 1658 கோடி
ரூபாய்க்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்திருப்பதை கடுமையாக கண்டித்து ஒரு
கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தையும் ராசா குப்பைக் கூடையில்
தூக்கிப் போட்டார்.

“முதலில் வருபவருக்கே முன்னுரிமை“ என்ற கொள்கையை எனக்கு முன் இருந்த
அமைச்சர்கள் கடைபிடித்தார்கள், அதனால் நானும் கடைபிடித்தேன் என்று ராசா
சொல்லும் காரணத்திலும் வலு இல்லை. ஏனெனில் 2003ல் முதன் முறையாக முதலில்
வருபவருக்கே முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட போது 200 லைசென்சுகள்
வழங்க அரசு வசம் அலைக்கற்றை இருந்தது. ஆனால் விண்ணப்பம் செய்ததோ வெறும்
51
 நிறுவனங்கள் தான்.

2003ல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறை கடைபிடிக்கப் பட்ட போது
இருந்த விதி, முதலில் விண்ணப்பம் செய்பவர் முதலில் வந்தவராக
கருதுப்படுவார் என்பது. ஆனால் ராசா இந்த விதியையும் மாற்றுகிறார்.
என்னவென்றால், முதலில் லைசென்சு வழங்கியதற்கான தகுதிகளை பூர்த்தி
செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் என்று. அதாவது என்னவென்றால், லைசென்சு
உங்களுக்கு வழங்கப் பட்டால்,
 லைசென்சுக்கான மொத்த தொகையையும் வங்கி வரைவோலை மூலமாக செலுத்துபவருக்கே
ஸ்பெக்ட்ரம் என்பது. இவ்வாறு விதியை மாற்றி 10.01.2008 அன்று பத்திரிக்கை
செய்தி மூலமாக அறிவிப்பு வெளியிடுகிறார் ஆ.ராசா.


எளிதாக சொல்ல வேண்டுமென்றால்.2003ல் அமலில் இருந்த முறை.

விண்ணப்பம்

லைசென்சுக்கான கடிதம்

தொகை செலுத்துவதற்கு 15 நாட்கள்.

லைசென்சுகள்

அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.

10.01.2008 அன்று ராசா புகுத்திய புதிய திட்டம்.

122 விண்ணப்பங்கள் பரிசீலனை

தொகை செலுத்த வேண்டும்.

லைசென்சுகள்

அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.

இது போல வழிமுறையை திடீரென்று மாற்றியதால் பல நிறுவனங்கள் தொகையை
வரைவோலையாக செலுத்த முடியாமல் திணறின. தொகை என்றால் ஆயிரம் ஐநூறு
கிடையாது நண்பர்களே.   1500 கோடி, 2000 கோடி என்ற அளவில். அரை நாளுக்குள்
2000 கோடிக்கு, நீங்கள் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி….
வரைவோலை எடுத்து விடுவீர்களா ?

ஆனால், ராசா ஒதுக்கிய ஸ்பெக்ட்ரம் திட்டத்தின் படி, 13 விண்ணப்பதாரர்கள்
வரைவோலையோடு தயாராக அலுவலகத்திற்குள்ளேயே இருந்தார்கள். எப்படி இருக்கறது
?

ஆக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையையும் ராசா சரிவர பின்பற்றவில்லை.

மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில், அரசுக்கு ஏராளமான வருமானம் வந்து
குவிந்தவுடன், ஆ.ராசா சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா ?

“3ஜி பாஸ்மதி அரிசி போல… அதனால் விலை அதிகம்.
2ஜி கருணாநிதி போடும் ஒரு ரூபாய் அரிசி போல. “

மேலும் ராசா சொன்ன மற்றொரு காரணம், போட்டியிடும் நிறுவனங்கள் விலையை
அதிகம் கொடுத்தால், அது வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும்.
அதனால்தான் குறைந்த விலைக்கு கொடுத்தோம் என்பது. ராசாவின் கூற்றுப் படியே
பார்த்தாலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 10 மடங்கு விலை
கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நிறுவனம் எப்படி குறைந்த விலைக்கு கொடுக்க
முடியும் ?


மேலும், டாடா நிறுவனம் 2ஜிக்கு கொடுத்த தொகை 12 கோடி.   3ஜிக்கு கொடுத்த
தொகை 152 கோடி. ஆனால் 3ஜிக்கு டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை என்ன
தெரியுமா ? ஒரு வினாடிக்கு 66 காசுகள்.   இந்தத் தொகையும் போகப் போக
குறையவே வாய்ப்பு உள்ளது.

1995ம் ஆண்டு, இதே போல ஏலம் விட்ட போது, இந்தியாவில் இந்த ஏலத்தில்
கலந்து கொள்ள பலர் முன்வரவில்லை என்ற வாதமும் சொத்தையானது. ஏனெனில்,
இந்தியாவில் 1995ல் தான் செல்பேசி என்ற விஷயமே அறிமுகம் ஆகிறது.
யாருக்கும் அனுபவம் இல்லை. இன்கமிங் 18 ரூபாய் அவுட்கோயிங் 30 ரூபாய்
என்ற தொகை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 2007ல் பல
ஆபரேட்டர்கள் உள்ளனர். அவுட் கோயிங் 10 காசு என்ற
 வரை ரேட் குறைந்து விட்டது. இப்போது 1995ல் உள்ள நிலையை ஒப்பீடு
செய்யும் ராசாவின் தந்திரம் அயோக்கியத்தனமானது.

அடுத்து ராசா எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் இந்த டெலிகாம் நிறுவனங்கள்
ஒரு குழுவைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதை உடைக்கவே புதிய
நிறுவனங்களை அனுமதித்தேன் என்பது. இவர் சொல்லும் அந்தக் குழுவில் கூட
அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்லும், எம்.டி.என் எல்லும் இருந்தனவே ? இதே
கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட, திறந்த முறை ஏலத்தில் மேலும் பல்வேறு
நிறுவனங்கள்
 கலந்து கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் ?   கடைசி தேதியை மாற்றி வைப்பதால்
குழுவாகச் செயல்பட்டவர்களை உடைத்தேன் என்று ராசா சொல்லுவது சோற்றுக்குள்
பூசணிக்காயை மறைப்பதே தவிர வேறொன்றும் இல்லை.

ஏலத்தில் விடுவதன் மூலமாக மக்களுக்கு விரைவாக சேவை கிடைக்கவே வாய்ப்பு
அதிகம். ஏனென்றால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நிறுவனங்கள்,
முதலில் வாடிக்கையாளரைக் கவருவதற்காக வேக வேகமாக வேலையை துவக்கி முதலில்
வாடிக்கையாளரை யார் பிடிப்பது என்று முனைப்பாக இருக்கும். உதாரணத்திற்கு
சொல்லப் போனால், டாடா நிறுவனம், 3ஜி ஏலத்தில் எடுத்த 4 மாதத்தில் தனது
3ஜி சேவையை
 துவக்கி விட்டது. இதையே 2ஜியோடு ஒப்பிட்டீர்கள் என்றால், ஏறக்குறைய 3
ஆண்டுகள் ஆகியும், இன்னும் 85 நிறுவனங்கள் வேலையை தொடங்காமல்
இருக்கின்றன, அதனால் அவற்றின் லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம்
என்பதுதான் ட்ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.

மேலும் 2ஜி லைசென்சுகளைப் பெறுவதற்கென, கடுமையான தகுதிகளை ட்ராயும்
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் விதித்திருக்கின்றன.   வழங்கப்
பட்டுள்ள 2ஜி லைசென்சுகளை பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள்
தகுதியே இல்லாத நிறுவனங்கள் என சிஏஜி தனது அறிக்கையைல்
தெரிவித்திருக்கிறது.
ராசாவின் கண்ணசைவு இன்றி இத்தனை தகுதியில்லாத நிறுவனங்கள் லைசென்சுகள்
பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே….


லைசென்சு பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய
நிறுவனங்களின் பினாமி நிறுவனங்களாகவே இருப்பது இன்னொரு பெரிய முரண்பாடு.
உதாரணத்திற்கு அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனம் என்ற நிறுவனம் 6.9.2007ல்
மத்திய பிரதேசத்துக்கும் பீகாருக்கும் லைசென்சுகளைப் பெற்றது. இந்த
நிறுவனத்தில் ஆஷிஷ் தியோரா என்பவர் 25 சதவிகித பங்குகளை
வைத்திருக்கிறார்.   க்ளாரிட்ஜெஸ்
 இன்போடெக் என்ற நிறுவனம் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. இந்த
க்ளாரிட்ஜெஸ் நிறுவனத்தின் பங்குகளை யார் வைத்திருக்கிறார் என்று
பார்த்தால் ஆஷிஷ் தியோரா 99.77 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்.
இப்போது அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை
வைத்திருப்பது யார் என்பது புரிகிறதா ?

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பெரிய பங்கு இருக்கும்
செய்திகள் வெளிவந்ததும், ராசாவின் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
செய்த பிரமாண வாக்குமூலத்தில் அதை மறுத்து, விண்ணப்பம் செய்யும்
நேரத்தில் அதாவது 2 மார்ச் 2007 அன்று உள்ளபடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு
வெறும் 10 சதவிகித பங்குகள் தான் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் உண்மை
 நிலவரம் என்ன தெரியுமா ?

ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு 9.90 சதவிகித
பங்குகள். டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 90.09 சதவிகித பங்குகள்.

90.09 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்
பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா ? தலா 25 சதவிகிதம் வீதம் 75
சதவிகித பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆஷிஷ் கரேகர், தினேஷ் மோடி மற்றும்
பரேஷ் ராதோட். இவர்கள் மூன்று பேரும் அனில் அம்பானி நிறுவனத்தில்
பணிபுரியும் ஊழியர்கள். இப்போது ஸ்வான் நிறுவனம் யாருக்குச் சொந்தம்
என்று புரிகிறதா ?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும் ?
3ஜி ஏலத்திலேயே 67 ஆயிரம் கோடிதானே வந்தது என்று சில அறிவாளிகளும் அறிவு
ஜீவிகளும் கேள்வி எழுப்புகிறார்கள்.

2ஜி ஏலம் நடந்திருக்க வேண்டிய ஆண்டு ஜனவரி 2008. அப்போது செல்பேசி
சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 250 மில்லியன். இந்தியாவின் மொத்த
ஜனத்தொகையையும் கணக்கில் வைத்துப் பார்த்தால் இன்னும் 750 மில்லியன்
இணைப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு
ஏலத்தில் எடுக்கும்.   3ஜி ஏலம் நடக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை
600 மில்லியனை தொட்டு
 விட்டது. எவ்வளவு தொகைக்கு எடுத்தாலும் இன்னும் 400 மில்லியன்
இணைப்புகள் தான் வளர்ச்சியின் அளவு எனும் போது எப்படி அதிக தொகைக்கு ஏலம்
எடுப்பார்கள். அதனால் தான் 3ஜி ஏலம் வெறும் 67 ஆயிரம் கோடிக்குப் போனது.
 சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி
என்பது மிகையல்ல.



இப்போது சொல்லுங்கள். ராசா நல்லவரா… கெட்டவரா….

__._,_.__ நன்றி :மது நெல்லை.